இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாணமை அரசனின் இராஜத்துரோகம்

படம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்: https://www.gettyimages.com ) போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர்.  1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது.  அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 1000 எருதுகள

சம்மாந்துறை எதிர் பழுகாமம் எதிர் போரைதீவு – ஒரு முக்கோணச்சமர்

படம்
- பால்டியசின் குறிப்புகளிலிருந்து.. 1611ஆம் ஆண்டு யூன் மாதம். கண்டி மகாராசன் செனரதனின் அரசவை. ஒற்றுச்செய்தி கிடைத்திருந்ததால், வந்து வணங்குபவன் பழுகாம மன்னனின் தூதன் என்பது அரசனுக்குத் தெரிந்திருந்தது. "மன்னா, போரைதீவு அரசனான ஞானசங்கரி, போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான். தன் ஆளுகைக்குட்பட்ட எல்லாத் துறைமுகங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றான். அவனது படை  தங்களுக்கெதிராகக் கிளம்புவதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதை எங்கள் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் முறைப்படி அறிவித்து எச்சரிக்கவே வந்தேன்" தூதன் பணிந்தான். "போரைதீவு மன்னன் ஞானசங்கரி, உங்கள் அரசன் செல்லப்பண்டாரத்தின் கூடப்பிறந்த தம்பி அல்லவா?"  செனரதனின் புருவங்கள் நெறிந்தன. "ஆம் அரசே. ஆனால் அரசியலில் உறவுகளுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதே இராஜதந்திரத்தின் முதற்பாடம்." தூதன் பணிவாகத்தான் சொன்னான். போர்த்துக்கேயர்  ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் திருக்கோணமலையில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள். கிழக்கில் பலம்வாய்ந்த ஒரு பின்னணி இருக்காமல் இந்த முயற்

நற்பிட்டிமுனை பாசம்! நிந்தவூர் நேசம்! அக்கரைப்பற்று ஆசம்!

படம்
மயிலாடும் மண்ணில் விருந்தோம்பும் வண்ணம்! - தோமஸ் அந்தோனி ரீடரின் நாட்குறிப்பிலிருந்து.. மட்டக்களப்புக்கு வந்தால் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற கருத்து இலங்கையின் வெளிமாகாணங்களில் உண்டு. உண்மையில் இங்கே சாப்பிட பாயில் உட்கார்ந்தால் உபசரித்து உபசரித்து எழ விடமாட்டார்கள், நமக்கும் பாயில் ஒட்டிவிட்ட பிரமை உண்டாகிவிடும். அதை, கிழக்கின் தனித்துவங்களுள் ஒன்றான மாந்திரீகத்தோடு இணைத்து சொல்லப்படும் நகையாடல் தான் பாயோடு ஒட்டும் கதை. “ஒருக்கா வந்தால் ஆயுசுக்கும் சோறு போடுறீங்கடா, இனி இங்காலைப்பக்கம் இவன் வரவே கூடாது எண்டு பிளான் பண்ணித்தானே இப்பிடித் தாறீங்கள்?”, “அடேய் பெற்றி அம்பாரைக்கு ட்ரிப் அடிக்கிறண்டா வெறுவயித்தோட போங்கோ! ஒருநாள் ருவர் போனா கிடைக்கிற சாப்பாட்டுக்கே ஒரு கிளமை ரொய்லெற்றில சீவியம் நடத்தோணும்” இதெல்லாம் தீவளாவிய நண்பர் வட்டாரங்களில் கிழக்குத் தொடர்பான நகைச்சுவை உரையாடல்களில் வழக்கமானவை. பொதுவாகவே இலங்கையின் விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. இலங்கையின் எந்தப்பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அங்கே கூட உணவு விடயத்தில் இதே கவனிப்புத் தான் கிடைக்கிறது. அப்படி இருக்க,