மேதியவுணன்கொல்பாவை வாழ்த்து - தமிழ் மகிடாசுரமர்த்தினி தோத்திரம்!
"அயிகிரி நந்தினி நந்திதமேதினி" என்று ஆரம்பிக்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது! கொலுவுக்கு அடுத்தபடியாக, நவராத்திரி என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது, மகிடாசுரனும், இந்த மகிடாசுரமர்த்தினி தோத்திரமும்தான்! அதற்குள்ள இயல்பான கவர்ச்சியும், பாடும்போதெழும் உணர்ச்சிப்பெருக்கும், ஏனைய இறைதுதிகளை விட, அதற்கு மட்டும் தனித்துவத்தை ஏற்படுத்திவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்துதியானது, “இராமகிருஷ்ண கவி” பாடியது என்றும், ஆதிசங்கரர் பாடியது என்றும் இருவேறு கருத்துள்ளது.