இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 02)

படம்
போன தடவை தீபாவளி பற்றிப் பார்த்த உங்களுக்கு, அதற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் ஒரு விழா புகழ்பெற்று விளங்கியிருந்தது என்றும், தற்போதும் அது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம். சித்திரைப்புத்தாண்டு, தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் கூட திருத்தமாகச் சொல்லப்படாத சங்க இலக்கியங்களில், இந்த விழா சொல்லப்பட்டிருக்கின்றது என்பதும், தமிழர் மத்தியில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரேயொரு விழா இது மட்டுமே என்றும் சொன்னால், அது பெருமையாகத் தான் இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்தத் தமிழரின் திருநாளை நீங்களும் கூடிய விரைவில் கொண்டாடத் தான் போகிறீர்கள். ஆம். அடுத்த கிழமை வரப்போகின்ற கார்த்திகை விளக்கீடே தான். கார்த்திகை மாதத்தில் பூரணை வருகின்ற நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நட்சத்திரமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதத்துக்கே கார்த்திகை என்று பெயர். இந்தக் கார்த்திகை கார்த்திகையில் தான் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை எரித்தும், வீட்டு வள

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)

படம்
தீபாவளி கொண்டாடி முடிந்த கையோடு உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி சொல்லவேண்டும். தமிழுலகைப் பொறுத்தவரை முக்கியமான பண்டிகைகள் மூன்று. சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி மற்றும் தைப்பொங்கல். இதைச் சொல்லத்தானா இந்தக் கட்டுரை எழுதினாய் என்று சலித்துக்கொள்கிறீர்களென்றால், அது தான் இல்லை. நம் தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இந்த மூன்று பருவ காலங்களிலுமே மறந்தும் கூட இணையப்பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது. போனாலும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வந்துவிட வேண்டும். சித்திரை வருடப்பிறப்பின் போது, யாரோ ஒரு பகுத்தறிவுவாதி, அது ஆரியப்புத்தாண்டு. கொண்டாடும் நீங்களெல்லாம் ஆரிய அடிவருடிகள் என்று சபித்துக் கொட்டிக்கொண்டிருப்பார். தீபாவளி வந்தால், யாராவது முற்போக்குவாதி ஒருவர் ஆரியப்பண்டிகையைக் கொண்டாடும் முட்டாள்களே, வீணாக பட்டாசு கொளுத்தி சூழலை மாசுபடுத்தாதீர்கள்; என்று முழங்கிக் கொண்டிருப்பார். தைப்பொங்கல் வந்தாலோ, இன்னொரு மேதாவி வந்து பொங்கல் பொங்குவோரின் அகப்பையைப் பறித்து எறிந்துவிட்டு, "அதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இதைப் பிடியுங்

மட்டக்களப்பின் மலபார்கள்

படம்
மட்டக்களப்பு கோட்டை -  1721 இடச்சு  ஓவியம் ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ் மட்டக்களப்பு மலபார்கள் அதாவது தமிழர்கள் பற்றி சொல்வதை இந்த வாரம் பார்க்கலாம். பழக்கவழக்கம், சமயம்,  தோற்றம், ஏனைய இயல்புகள், அனைத்திலும் மட்டக்களப்பின் மக்கள், யாழ்ப்பாணப்பட்டினம் – கொட்டியாரம் – மங்குல்  கோரளையின் வடபகுதி உள்ளிட்ட, இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரையான பகுதி உள்ளடங்கலாக வாழும் மலபார் மக்களை  ஒத்தவர்கள். இப்போதும் மலபார் மொழி பேசும் இவர்கள், மிகப்பழங்காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருவதுடன், தங்களுக்குரிய  உட்பிரிவுகளாகப் பிரிந்துள்ளதுடன், சிங்களவர்களுடனோ வேடர்களுடனோ தங்கள் உட்பிரிவு தவிர்ந்த ஏனையோருடனோ கலந்து  வாழ்வதில்லை. ஏனையவர்களும் இவர்களுடன் கலக்க விரும்புவதில்லை. யாழ்ப்பாணப்பட்டினம், கொட்டியாரம் முதலான ஏனைய  பகுதி மக்கள் போலவே மட்டக்களப்பு மலபார்களும் சிங்களவர்களிலிருந்து தனிப்பட்டவர்களாக, ஓரளவு சுதந்திரமானவர்களாகவும்  இருக்கிறார்கள். கண்டி மன்னனின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே இவர்கள் நமது கம்பனியுடன் இணைந்திருக்கிறார்கள். இந்த அழகான, செழுமையான பூமி

வீரம் விளைஞ்ச மண்ணுரா இது!

படம்
போர்வீரன் ஒருவனும் பெண்ணொருத்தியும், மட்டக்களப்பு 1670 பிரெஞ்சு ஓவியம் “ஸ்ரைல்டா கெத்துடா மாஸ்டா” என்று நம்மை நாமே சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை இருக்கலாம், தமிழகத்தின் ஆன்மிக அரசியல்வாதியார் போல! அதையே இன்னொருவன் வந்து “அண்ணே நீங்க ஸ்ரைல்ணே கெத்துண்ணே மாஸ்ணே” என்று தமிழ்நாட்டுப் பாணியில் சொன்னால், எப்படி இருக்கும்? புல்லரித்துப் போகும் இல்லையா? அதையே நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஒரு வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போனால்? அதுவும் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்மப்பா, அப்பப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருந்தால்? “பரம்பரை பரம்பரையாக வீராதி வீரர்கள்டா நாங்க” என்று சொல்லிக்கொண்டு சுவரில் சாய்ந்து தலைகீழாகத் தான் நின்றிருப்போம், அப்படித்தானே? அப்போது ஏறாவூர்ப்பற்றின் வடக்கெல்லையான நட்டூர் ஆற்றிலிருந்து அக்கரைப்பற்றின் தெற்கெல்லையான சங்கமன்கண்டி வரை வரையறுக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு நாடு. அந்த நாட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றித் தான் இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார் வான்கூன்ஸ். வான்கூன்ஸ்...? எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்க வேண்டுமே! இந்த மனிதன் தான்