“அஞ்சன நிறுக்கும் கண்ணாலம் செய்யும் புத்த தேவர்!”
- பொலனறுவை வேளைக்காரக் கல்வெட்டிலிருந்து ஹெட்டதாகை, பொலனறுவை. பொலனறுவை சோழர்களின் தலைநகராக எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிய நகரம். ஆனால் அங்கு அதற்கு முன்பும் பின்பும் சோழநாட்டினதும் பாண்டிய நாட்டினதும் முழுமையான ஆதிக்கம் நிலவி இருக்கிறது. அதற்கான சான்றுகளைத் தான் நாம் இன்றும் அங்குள்ள சைவக்கோவில்களாகக் கண்டுகொண்டிருக்கிறோம். அப்படி, பொலனறுவையில் கிடைக்கும் சான்றுகளில் சுவாரசியமான ஒன்று, வேளைக்காரக் கல்வெட்டு. பொலனறுவை பாலி மொழியில் புலத்திநகரம் என்றும் வடமொழியில் புலஸ்திபுரம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் இதை ‘புலைநரி’ என்று அழைத்தார்கள். இராஜராஜசோழன் இலங்கையைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை ‘ஜனநாதபுரம்’ என்று மாற்றினான். பின்பு விஜயபாகு மீண்டும் இந்நகரைக் கைப்பற்றி பொ.பி 1055 முதல் 1110 வரை ஆண்ட போது, ‘விஜயராஜபுரம்’ என்று பெயர் பெற்றிருந்தது. தமிழர், தெலுங்கர், கேரளர் என்று பல நாடுகளை - பல சமூகங்களைச் சேர்ந்த ‘வேளைக்காரர்’ எனும் வீரர்கள், புலத்திநகரின் காவல் பணியில் ரூடவ்டுபட்டு வந்தார்கள். சோழர் காலத்திலும், பின் விஜயபாகு காலத்திலும், பின்பு பராக்கிரமப