பாணமை அரசனின் இராஜத்துரோகம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்: https://www.gettyimages.com ) போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர். 1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது. அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 1000 எருதுகள