ஒருவர் பேரறிஞராக இருக்கலாம், நம் பெருமதிப்புக்குரியவராக இருக்கலாம். அதற்காக, அவர் என்ன சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? சில முரண்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டக் கூட முயல்வோம், இல்லையா? அப்படி, என் பெருமதிப்புக்குரிய ஒருவரை, ஒரேயொரு கருத்தில் மட்டும் நான் மறுக்க நேரிட்டதுண்டு, அவர் ஆறுமுக நாவலர்! அப்படி அவர் சொன்னது: “சமண சமயத்துச் செட்டிச்சி விக்கிரகத்தின் இருபக்கத்தும் விநாயகக்கடவுள் விக்கிரகமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரகமும் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவமுதலியன செய்கிற அதிபாதகர்களுஞ் சைவசமய குருமாரோ!” - யாழ்ப்பாணச் சமயநிலை, 1872, பக்.உ௬ "செட்டிச்சியும் புறச்சமயத்தவளுமாகிய கண்ணகி பரம்பொருள் எனவும், விநாயகக்கடவுள் சுப்பிரமணியக் கடவுள் இருவரும் அவளிற்றாழ்ந்தவர் எனவும் மயங்கி ----- வழிபடும் அதிபாதகர்களும் சைவசமய நிந்தகர்கள் " - நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை,1875) நாவலரால் வட இலங்கையில் சைவ மறுமலர்ச்சி முன்னெடுக்கப்பட்டபோது, குடாநாட்டின் பெருமளவு கண்ணகி ஆலயங்கள், புவ