சீலைக்குப் பின் சிலை? - ‘திரை’க்கதை சொல்லும் தெய்வானை!
....கதிர்காமம் யாருக்குச் சொந்தம் பாகம் 03 கதிர்காமம் (படம்: kataragama.org ) போனகிழமை “கதிர்காமம் பௌத்தருக்கு சொந்தமாக இருக்கலாம்” என்று சொன்னதில் உங்களில் பலர் கெட்ட கோபத்தில் இருப்பீர்கள் என்று தெரியும். அதில் அர்த்தமே இல்லை. கோபிக்காமல், அந்தக் கட்டுரையை இன்னொரு முறை வாசியுங்களேன். அங்கு, சைவம், பௌத்தம் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, தமிழ் – சிங்களம் பற்றியே சொல்லப்படவில்லை. விஷ்ணுவும் முருகனும், மிகப்பழைய தமிழ்த்தெய்வங்கள். இலங்கையில் முருகன் பற்றிக்கிடைக்கும் சான்றுகள் கூட, சோழ – பாண்டிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியிலேயே பௌத்த நூல்களில் பதிவாகியுள்ளன என்பதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். முருகன் பௌத்தத் தெய்வமாக விளங்கிய முக்கியமான ஒரு சான்று, குருநாகலருகே தமிழ் விகாரையொன்றின் இடிபாட்டில் கிடைத்ததைக்கூட அங்கு நாம் பார்த்தோம். இன்று தமிழர் பௌத்தராக இல்லை என்பதற்காக, தமிழுக்கு பௌத்தம் மீதுள்ள தார்மிக உரிமையை நாம் மறுக்கமுடியாது தானே? வெளிக்காரணிகளால் ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறும் போது, தன் பழைய பாரம்பரியத்தையோ மரபுகளையோ மறக்காமல், தான் கைக்கொண்ட புதிய சமயத்திலு