இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“அஞ்சன நிறுக்கும் கண்ணாலம் செய்யும் புத்த தேவர்!”

படம்
- பொலனறுவை வேளைக்காரக் கல்வெட்டிலிருந்து ஹெட்டதாகை, பொலனறுவை. பொலனறுவை சோழர்களின் தலைநகராக எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிய நகரம். ஆனால் அங்கு அதற்கு முன்பும் பின்பும் சோழநாட்டினதும் பாண்டிய நாட்டினதும் முழுமையான ஆதிக்கம் நிலவி இருக்கிறது. அதற்கான சான்றுகளைத் தான் நாம் இன்றும் அங்குள்ள சைவக்கோவில்களாகக் கண்டுகொண்டிருக்கிறோம். அப்படி, பொலனறுவையில் கிடைக்கும் சான்றுகளில் சுவாரசியமான ஒன்று, வேளைக்காரக் கல்வெட்டு. பொலனறுவை பாலி மொழியில் புலத்திநகரம் என்றும் வடமொழியில் புலஸ்திபுரம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் இதை ‘புலைநரி’ என்று அழைத்தார்கள். இராஜராஜசோழன் இலங்கையைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை ‘ஜனநாதபுரம்’ என்று மாற்றினான். பின்பு விஜயபாகு மீண்டும் இந்நகரைக் கைப்பற்றி பொ.பி 1055 முதல் 1110 வரை ஆண்ட போது, ‘விஜயராஜபுரம்’ என்று பெயர் பெற்றிருந்தது. தமிழர், தெலுங்கர், கேரளர் என்று பல நாடுகளை - பல சமூகங்களைச் சேர்ந்த ‘வேளைக்காரர்’ எனும் வீரர்கள், புலத்திநகரின் காவல் பணியில் ரூடவ்டுபட்டு வந்தார்கள். சோழர் காலத்திலும், பின் விஜயபாகு காலத்திலும், பின்பு பராக்கிரமப

பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்

படம்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.  கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் தெரிக