இடுகைகள்

அம்பாறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்

படம்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.  கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் த...

பாணமை அரசனின் இராஜத்துரோகம்

படம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்: https://www.gettyimages.com ) போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர்.  1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது.  அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 100...

பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!

படம்
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில் கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது , பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு . கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம் , வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய , இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது . கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை , கிழக்கிலங்கையில் தம்பிலுவில் , பட்டிமேடு , காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான இடங்களாகக் குறிப்பிடுவது மரபு . இவை மூன்றிலும் , நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு , காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன . தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது . பட்டிமேட்டு அம்மன் கோவில் மதுரைக்குப் போய் கண்ணகியை வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “ நான் இங்கே இருக்க நீ அங்கே போகவேண்டாமென்று ” என்று அம்மன் சொல்லி , கோவில்மேட்டில் கோவில் கொண்டாள் . வோறாகொடைக் கல்லிலிருந்து ( சடையந்தலாவையின் வீரகொட எல்ல ?) பரிவார தெய்வங்களைக் கொணர்ந்து , வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும் சிங்களப்பத்ததி...

அரச மானியம் பெற்ற பள்ளிவாசல்! விகாரை ஊழியம் செய்த தமிழர்!

படம்
நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டிலிருந்து …. இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் , “ பற்று ” என்ற பெயரில் சிறுசிறு ஆட்சிப்பிரிவுகளாக நிலவி வந்தது , உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் . இன்றும் , அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று , பாணமைப்பற்று ஆகிய பெயர்களையும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் எருவிற்பற்று , போரதீவுப்பற்று , மண்முனைப்பற்று முதலான பெயர்களையும் நம்மால் காணக்கூடியதாக இருக்கிறது . இப்படி முன்பொருமுறை கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்து மறைந்து போன பற்றுப்பிரிவு தான் , நாடுகாடுப்பற்று . 1812 வரைபடமொன்றில் நாடுகாடு (Nadekadoe) நாடுகாடுப்பற்று இன்றைய அம்பாறை , இறக்காமம் , தமணை பிரதேச செயலகப் பிரிவுகளையும் , சம்மாந்துறை – அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளின் சில பகுதிகளையும் அடக்கியதாக இருந்தது . நாடுகாடுப்பற்று என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது   என்பதற்கான சான்று கிடைக்கவில்லை . அந்தப் பற்று , குடியிருப்புகள் உருவாகி நாடாக விளங்கி , அதே வேகத்திலேயே பாழடைந்து காடாக மாறியதால் அதற்கு நாடுகாடுப்பற்று என்ற பெயர் வந்ததாக ஒருசாரார் கூறுவார் . ஆனால் இலங்கை வரலாற்றில் , குறிப்பாக ...

ஆளே நீங்க எவடம்?

படம்
மட்டு -  அம்பாறை இடப்பெயர் ஆய்வுகள் கிழக்கிலங்கைக் கிராமங்கள் வரலாறு, சரித்திரம் என்றெல்லாம் என்னென்னவோ  எல்லாம் ஆராய்கிறோம். ஆனால் மிகச்சிறிய விடயம் கூட, பென்னம்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஏன், உங்கள் ஊரின் பெயரை யோசித்திருக்கிறீர்களா? அதுவே ஆயிரம் கதை சொல்லும்.  தொன்மங்கள் வேறுபட்டாலும், பொதுவாக ஊர்கள், இயற்கைக் காரணிகளை மையமாகவே வைத்தே தோற்றம் பெறுகின்றன. மரமோ, புவியியல் அமைப்பொன்றோ காரணமாக பெயர் பெறாத ஊர்கள் மிகக்குறைவு.  இப்படிப் பெயர் பெற்றிருக்கின்ற மட்டு-அம்பாறை மாவட்டங்களின் முக்கியமான சில ஊர்களை மாத்திரம் இங்கு பார்க்கலாம். பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான செங்கற்படை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்றுக்கு அந்தப்பெயர் வந்தது. இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டி என்றால் ஒருவகை நீர்க்கிழங்கு.   அதுபோல,  சேனைக்காவலில் பயன்படும் உயரமான காவலரண் 'அட்டாளை' என்று அழைக்கப்படும். அட்டாளை அமைந்திருந்த சேனை அட்டாளைச்சே...