பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது. கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் த...