இடுகைகள்

கண்ணகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொற்புறா அன்னை!

படம்
வைகாசி பிறந்தாலே கிழக்குக்கரையோரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும். ஊரெல்லாம் கண்ணகியின் நாட்கள் கழிந்துகொண்டிருக்கும். அந்தக் கொண்டாட்ட நாட்களில், கண்ணகி தொடர்பான அரிய தகவல்கள் எதையும் பார்ப்பதே பொருத்தமானது, இல்லையா? சிவாகமவிதிக்கு உட்பட்டு, மேல்நிலையாக்கத்துக்கு ஆளான எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிங்கமே அவள் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அரிதாக நந்தியும் அவள் வாகனமாகச் சொல்லப்படும். ஆனால், கிழக்கிலங்கை மரபில் கண்ணகியின் ஊர்தி எது தெரியுமா? புறா, பொன்னிறப் புறா, பொற்புறா! கிழக்கிலங்கையில் மிகப்பழையவையாக இனங்காணப்படும் கண்ணகி ஆலயங்கள் மூன்று. பட்டிமேடு, தம்பிலுவில் மற்றும் காரைதீவு. அவற்றில் முதல் இரண்டிலும், கண்ணகிக்கும் புறாவுக்கும் உள்ள உறவு, இன்றும் விசேடமாக நினைவுகூரப்படுகிறது. தம்பிலுவில் அம்மன் கோயிலின் தோற்றம் தொடர்பான ஒரு கதையில் புறா இணைத்துச் சொல்லப்படுகிறது.  பெண்கள் விறகு பொறுக்க வந்தபோது அவர்களை அலைக்கழித்த ஒரு வினோதமான பொன்னிறப் புறா, “கண்ணகி!” என்று குனுகியதாகவும், அது மறைந்த இடத்தில், இங்குள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும்,...