இடுகைகள்

பாணமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்

படம்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.  கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் த...

மட்டக்களப்பின் மலபார்கள்

படம்
மட்டக்களப்பு கோட்டை -  1721 இடச்சு  ஓவியம் ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ் மட்டக்களப்பு மலபார்கள் அதாவது தமிழர்கள் பற்றி சொல்வதை இந்த வாரம் பார்க்கலாம். பழக்கவழக்கம், சமயம்,  தோற்றம், ஏனைய இயல்புகள், அனைத்திலும் மட்டக்களப்பின் மக்கள், யாழ்ப்பாணப்பட்டினம் – கொட்டியாரம் – மங்குல்  கோரளையின் வடபகுதி உள்ளிட்ட, இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரையான பகுதி உள்ளடங்கலாக வாழும் மலபார் மக்களை  ஒத்தவர்கள். இப்போதும் மலபார் மொழி பேசும் இவர்கள், மிகப்பழங்காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருவதுடன், தங்களுக்குரிய  உட்பிரிவுகளாகப் பிரிந்துள்ளதுடன், சிங்களவர்களுடனோ வேடர்களுடனோ தங்கள் உட்பிரிவு தவிர்ந்த ஏனையோருடனோ கலந்து  வாழ்வதில்லை. ஏனையவர்களும் இவர்களுடன் கலக்க விரும்புவதில்லை. யாழ்ப்பாணப்பட்டினம், கொட்டியாரம் முதலான ஏனைய  பகுதி மக்கள் போலவே மட்டக்களப்பு மலபார்களும் சிங்களவர்களிலிருந்து தனிப்பட்டவர்களாக, ஓரளவு சுதந்திரமானவர்களாகவும்  இருக்கிறார்கள். கண்டி மன்னனின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே இவர்கள் நமது கம்பனியுடன் இணைந்த...

பாணமை அரசனின் இராஜத்துரோகம்

படம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்: https://www.gettyimages.com ) போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர்.  1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது.  அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 100...