பௌத்தரின் கதிர்காமமும் தாய்லாந்தும்!
கதிர்காமம் கட்டுரைத் தொடர் 02 பார்வதி மாணிக்கத் துக்கு கொஞ்ச ம் சாப்பாடு தான் கிடைத்தது . அவளுக் கு இரு மகன்கள். கணவன் ஈஸ்வரனை பரிதாபமாகப் பார்த்தாள் அவள் . ஈஸ்வரனோ புன்னகைத்த படி , இரு மகன் மாரை யும் அழைத்தார். “ கொஞ்சமே உணவு இருப்பதால் , ஒருவருக்கே தர முடியும் செல்வங் களே ! உங்களில் யார் முதன்முதலில் இந்த உவர்நீர்ப்பரப்பை வலம் வருகின்றார்களோ அவருக்கே இந்த சாப்பாடு . ” என்று அருகே கடலைக் காட்டினார் அவர் . ஒருசொல்லும் சொல்லாமல் இளையவன் கந்தகுமாரன் , தன் மயிலில் ஏறிப் பறந்தான் , சமுத்திரத்தை வலம்வர! என்னடா எங்கயோ கேட்டமாதிரி …. அ டேய் , இது ஞா னப்பழம் கதை தானே என்று முறைக் காதீர்கள் . பொறுமை ! முழுக்க வாசியுங்கள ன் ! மூத்தவன் குண்டுக் கணநாத ன் யோசித்தான். கடலைச் சுற்றுவது என்ன , வீட்டிலிருந்து கடற்கரைக்குக் கூட அவனால் நடக்கமுடியாது . இரண்டு எட்டு வைத்தாலே இளைக்கும் ‘ சீனி வருத்த ’ உடம்பு அவனுக்கு . ஆனால் உடம்பை விடப்பெரிய மூளை . தலை வேறு யானைத்தலை இல்லையா ! “ அப்பா உவர்நீர்ப்பரப்பை அல்லவா சுற்றிவரச் சொன்னார். உவர்நீர் …. உப்பு.. நீர் …...! அப்படியென்றால் …” அவன் ...