இடுகைகள்

ஒல்லாந்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்

படம்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03 இலங்கையின் பழைய வரைபடமொன்றில் பாணமை போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.  கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் த...

மட்டக்களப்பின் மலபார்கள்

படம்
மட்டக்களப்பு கோட்டை -  1721 இடச்சு  ஓவியம் ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ் மட்டக்களப்பு மலபார்கள் அதாவது தமிழர்கள் பற்றி சொல்வதை இந்த வாரம் பார்க்கலாம். பழக்கவழக்கம், சமயம்,  தோற்றம், ஏனைய இயல்புகள், அனைத்திலும் மட்டக்களப்பின் மக்கள், யாழ்ப்பாணப்பட்டினம் – கொட்டியாரம் – மங்குல்  கோரளையின் வடபகுதி உள்ளிட்ட, இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரையான பகுதி உள்ளடங்கலாக வாழும் மலபார் மக்களை  ஒத்தவர்கள். இப்போதும் மலபார் மொழி பேசும் இவர்கள், மிகப்பழங்காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருவதுடன், தங்களுக்குரிய  உட்பிரிவுகளாகப் பிரிந்துள்ளதுடன், சிங்களவர்களுடனோ வேடர்களுடனோ தங்கள் உட்பிரிவு தவிர்ந்த ஏனையோருடனோ கலந்து  வாழ்வதில்லை. ஏனையவர்களும் இவர்களுடன் கலக்க விரும்புவதில்லை. யாழ்ப்பாணப்பட்டினம், கொட்டியாரம் முதலான ஏனைய  பகுதி மக்கள் போலவே மட்டக்களப்பு மலபார்களும் சிங்களவர்களிலிருந்து தனிப்பட்டவர்களாக, ஓரளவு சுதந்திரமானவர்களாகவும்  இருக்கிறார்கள். கண்டி மன்னனின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே இவர்கள் நமது கம்பனியுடன் இணைந்த...

வீரம் விளைஞ்ச மண்ணுரா இது!

படம்
போர்வீரன் ஒருவனும் பெண்ணொருத்தியும், மட்டக்களப்பு 1670 பிரெஞ்சு ஓவியம் “ஸ்ரைல்டா கெத்துடா மாஸ்டா” என்று நம்மை நாமே சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை இருக்கலாம், தமிழகத்தின் ஆன்மிக அரசியல்வாதியார் போல! அதையே இன்னொருவன் வந்து “அண்ணே நீங்க ஸ்ரைல்ணே கெத்துண்ணே மாஸ்ணே” என்று தமிழ்நாட்டுப் பாணியில் சொன்னால், எப்படி இருக்கும்? புல்லரித்துப் போகும் இல்லையா? அதையே நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஒரு வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போனால்? அதுவும் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்மப்பா, அப்பப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருந்தால்? “பரம்பரை பரம்பரையாக வீராதி வீரர்கள்டா நாங்க” என்று சொல்லிக்கொண்டு சுவரில் சாய்ந்து தலைகீழாகத் தான் நின்றிருப்போம், அப்படித்தானே? அப்போது ஏறாவூர்ப்பற்றின் வடக்கெல்லையான நட்டூர் ஆற்றிலிருந்து அக்கரைப்பற்றின் தெற்கெல்லையான சங்கமன்கண்டி வரை வரையறுக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு நாடு. அந்த நாட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றித் தான் இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார் வான்கூன்ஸ். வான்கூன்ஸ்...? எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்க வேண்டுமே! இந்த மனிதன் தான்...

மட்டக்களப்பின் தலைநகராகும் காரைதீவு!

படம்
வான்கூன்சின் அறிக்கையிலிருந்து..... இதென்ன புதுக்கதை ! எப்போது நிகழ்ந்தது இது ? யார் காரைதீவை மட்டக்களப்பின் தலைநகர் ஆக்கியது ? என்றெல்லாம் பதற்றம் கொள்ள வேண்டாம் . கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் . என்ன ஏதென்று போய் ஆறுதலாக விசாரிப்போம் . இலங்கை ஒல்லாந்தரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதி அது . அப்போது (1664 - 1675) இலங்கையின் இடச்சு ஆளுநராக பதவி வகித்தவர் , ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). அவர் பதவியா என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு , 1675 இல் ஆளுநர் நாயகமாக   இடமாற்றம் பெற்றுச் சென்றார் . அப்போது அவர் எழுதிச் சென்ற இலங்கை பற்றிய அறிக்கையில் மட்டக்களப்பு பற்றிய   விரிவான சித்திரம் வருகின்றது . அதில் சில குறிப்புகள் வரலாற்று ரீதியாக முக்கியமானவை .      ரைக்லொவ் வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் “ மட்டக்களப்பில் , காலம் காலமாக , மூன்று திசாவைகள் அல்லது மூன்று பண்டாரங்கள் ஆண்டு வந்த மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன . நாங்கள் இன்று வசதிக்காக ஒரு பிரிவாக ஆண்டாலும் , அ...