இடுகைகள்

பண்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 02)

படம்
போன தடவை தீபாவளி பற்றிப் பார்த்த உங்களுக்கு, அதற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் ஒரு விழா புகழ்பெற்று விளங்கியிருந்தது என்றும், தற்போதும் அது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம். சித்திரைப்புத்தாண்டு, தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் கூட திருத்தமாகச் சொல்லப்படாத சங்க இலக்கியங்களில், இந்த விழா சொல்லப்பட்டிருக்கின்றது என்பதும், தமிழர் மத்தியில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரேயொரு விழா இது மட்டுமே என்றும் சொன்னால், அது பெருமையாகத் தான் இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்தத் தமிழரின் திருநாளை நீங்களும் கூடிய விரைவில் கொண்டாடத் தான் போகிறீர்கள். ஆம். அடுத்த கிழமை வரப்போகின்ற கார்த்திகை விளக்கீடே தான். கார்த்திகை மாதத்தில் பூரணை வருகின்ற நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நட்சத்திரமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதத்துக்கே கார்த்திகை என்று பெயர். இந்தக் கார்த்திகை கார்த்திகையில் தான் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை எரித்தும், வீட்டு வள...

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)

படம்
தீபாவளி கொண்டாடி முடிந்த கையோடு உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி சொல்லவேண்டும். தமிழுலகைப் பொறுத்தவரை முக்கியமான பண்டிகைகள் மூன்று. சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி மற்றும் தைப்பொங்கல். இதைச் சொல்லத்தானா இந்தக் கட்டுரை எழுதினாய் என்று சலித்துக்கொள்கிறீர்களென்றால், அது தான் இல்லை. நம் தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இந்த மூன்று பருவ காலங்களிலுமே மறந்தும் கூட இணையப்பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது. போனாலும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வந்துவிட வேண்டும். சித்திரை வருடப்பிறப்பின் போது, யாரோ ஒரு பகுத்தறிவுவாதி, அது ஆரியப்புத்தாண்டு. கொண்டாடும் நீங்களெல்லாம் ஆரிய அடிவருடிகள் என்று சபித்துக் கொட்டிக்கொண்டிருப்பார். தீபாவளி வந்தால், யாராவது முற்போக்குவாதி ஒருவர் ஆரியப்பண்டிகையைக் கொண்டாடும் முட்டாள்களே, வீணாக பட்டாசு கொளுத்தி சூழலை மாசுபடுத்தாதீர்கள்; என்று முழங்கிக் கொண்டிருப்பார். தைப்பொங்கல் வந்தாலோ, இன்னொரு மேதாவி வந்து பொங்கல் பொங்குவோரின் அகப்பையைப் பறித்து எறிந்துவிட்டு, "அதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இதைப் பிடியுங்...

தீபாவளி - ஒரு அலசல்

படம்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வழக்கம் போலவே ஆரியப்பண்டிகை, நரகாசுரன் தமிழன், அவனைக் கொன்ற ஐயர் ஆத்து மாமி சத்தியபாமா, வடை சுடு ஆனால் வெடி சுடாதே போன்ற வாதங்கள் சமவலைத்தளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. முழு இந்தியத் தீபகற்பமுமே கொண்டாடும் தீபாவளி, உண்மையிலேயே தமிழர் மத்தியில் திணிக்கப்பட்ட விழாவா? அது ஆரியப்பண்டிகையா?