இடுகைகள்

சைவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீலைக்குப் பின் சிலை? - ‘திரை’க்கதை சொல்லும் தெய்வானை!

படம்
....கதிர்காமம் யாருக்குச் சொந்தம் பாகம் 03 கதிர்காமம் (படம்:  kataragama.org ) போனகிழமை “கதிர்காமம் பௌத்தருக்கு சொந்தமாக இருக்கலாம்” என்று சொன்னதில் உங்களில் பலர் கெட்ட கோபத்தில் இருப்பீர்கள் என்று தெரியும். அதில் அர்த்தமே இல்லை. கோபிக்காமல், அந்தக் கட்டுரையை இன்னொரு முறை வாசியுங்களேன். அங்கு, சைவம், பௌத்தம் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, தமிழ் – சிங்களம் பற்றியே சொல்லப்படவில்லை. விஷ்ணுவும் முருகனும், மிகப்பழைய தமிழ்த்தெய்வங்கள். இலங்கையில் முருகன் பற்றிக்கிடைக்கும் சான்றுகள் கூட, சோழ – பாண்டிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியிலேயே பௌத்த நூல்களில் பதிவாகியுள்ளன என்பதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். முருகன் பௌத்தத் தெய்வமாக விளங்கிய முக்கியமான ஒரு சான்று, குருநாகலருகே தமிழ் விகாரையொன்றின் இடிபாட்டில் கிடைத்ததைக்கூட அங்கு நாம் பார்த்தோம். இன்று தமிழர் பௌத்தராக இல்லை என்பதற்காக, தமிழுக்கு பௌத்தம் மீதுள்ள தார்மிக உரிமையை நாம் மறுக்கமுடியாது தானே?  வெளிக்காரணிகளால் ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறும் போது, தன் பழைய பாரம்பரியத்தையோ மரபுகளையோ மறக்காமல், தான் கைக்கொண்ட புதிய ...

சைவத் திருக்கோயில்களும் இறையியலும்

படம்
ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம் . கோவான இறைவன் குடியிருக்கும் இல்லம் கோயில். இத்தகைய ஆலயங்கள் வெறுமனே இறைவழிபாட்டுக்கு மட்டும் கடப்பட்டவை அல்ல. மன்னர்கால செப்பேடுகள், சாசனங்கள், வேறு ஆதாரங்கள் என்பன மூலம், ஆலயங்கள், ஆடல், பாடல், ஓவியம் முதலிய கலைகளை வளர்த்த இடங்களாகவும், வேதம், கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இடங்களாகவும், ஆதரவற்றோர்க்கு அடைக்கல இடங்களாகவும், மருத்துவமனைகளாகவும், அவ்வளவு ஏன், " கலவி"யைக் கற்பிக ்கும் இடங்களாகக் கூட விளங்கியமையை அறிகிறோம்.

புலையனாக வந்த பரமன்

படம்
ஒரு சின்னக் கதை....!   அந்த அரசிக்கு ஒன்றும் புரியவில்லை! தான் கட்டிய ஆலயத்தின் குடமுழுக்கு நாளும் வந்தாயிற்று, எல்லா ஏற்பாடுகளும் கூட பூர்த்தியாயிற்று! ஆனால், இந்த ஆடல்வல்லான் திருவுருவச்சிலை மட்டும் இன்னும் சரியாகவில்லை! சிற்பியும் செய்து செய்து களைத்துவிட்டான்.. ஏதாவது குறை வந்துகொண்டேயிருக்கிறதே!