இடுகைகள்

குறுநாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தந்ததாது (பாகம் 05)

படம்
கப்பல் ஓய்வறைக்கு வெளியே கூச்சலும் குழப்பமும் வலுத்தபடியே வந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்ட அனுவ்வரத், அறையை விட்டு வெளியே வந்தபோது, அம்பலவாணன் மேற்றளத்துக்கு வேகமாக ஏறிவருவதைக் கண்டார். “வந்துவிட்டோம். அதோ தென்படுவது தான் வாஸ்கோடகாமா முனை” என்று சொல்லி எதிர்ப்புறம் சுட்டிக்காட்டினான் அம்பலவாணன். ஏதோ அசம்பாவிதத்தை எதிர்பார்த்து பதறிப்போயிருந்த அனுவ்வரத் நிம்மதியுடன் திரும்பிப் பார்த்தார். கோவாவின் கரையோரம் கடலுக்குள் நீண்டிருந்த அந்த முனையை மூன்று பர்மியக் கப்பல்களும் மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தன. நீலவானம், வெண்ணிறப் பட்டுமணல், அதில் எறும்புகள் போல அங்குமிங்கும் ஓடித்திரியும் மனிதர்கள், அப்பால் பச்சைவிரிப்பாகப் பசுங்காடு, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலநாடுகளின் பெருங்கப்பல்கள் என்று கடற்கரையே மனோரம்மியமாக இருந்தது.   அம்பலவாணன் மேற்றளத்தில் ஏற்கனவே கூடிநின்ற கப்பற் பணியாளர்களுடன் இணைந்து பலவித ஆணைகளை இட்டபடியே மரக்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பாய்மரச்சீலைக் கயிறுகளை அசைத்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களிலேயே மூன்று கப்பல்களிலும் பர்மிய மயில் கொடிகளின் அருகே வெண்ணிறக் க...

தந்ததாது (பாகம் 04)

படம்
“வெண்ணெய் திரண்டுவரும் போது தாழி உடைவது என்ற தமிழ்ப்பழமொழியை அறிந்திருக்கிறேன். ஆனால் வீதிய பண்டாரனின் மறைவு பெருந்துயருக்கு உரியது. நீண்டநாள் இலட்சியமொன்றை திட்டமிட்டு, அதை அடையமுன்னரே மாண்டுபோவது போல் மாவீரர்களுக்குக் களங்கமும் பரிதாபமும் ஏற்படுத்துவது வேறொன்றுமில்லை” என்றார் அனுவ்வரத். “அதன் பின்னர் என்ன நிகழ்ந்தது? போர்த்துக்கேயர் எதிர்பார்த்தது போல சீதாவாக்கை, கோட்டை, கண்டி தெக்கண அரசுகள் ஆரியச்சக்கரவர்த்தி அரசுடன் முரண்பட்டனவா?” என்று அவர் கேட்டார். “சரியாகத் தெரியவில்லை. சம்பவம் நடந்தபோது நான் சோழ மண்டலத்துக் காயல் பட்டினத்தில் தங்கியிருந்தேன்.  ஓரிரு மாதங்களின் பின் ஊர் திரும்பிய பின்னரே செய்தி அறிந்தேன்.” என்றான் அம்பலவாணன். பிரமாண்டமான அந்தப் பர்மியக் கப்பல் அப்போது மலையாளக்கரையைத் தாண்டி மங்களூருக்கு வடக்கே நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரு பெருங்கப்பல்கள் பர்மா நாட்டின் மயில் கொடி பறக்க அக்கப்பலைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தன. அனுவ்வரத்தும் அவரது சகா தென்னபதியும் கப்பலின் மேற்றளத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். அருகே கடலைப் பார்த்த வண்ணம் மேற்றள விளிம்பில் சாய்ந்தபடி...

தந்ததாது (பாகம் 03)

படம்
விடிகாலைச்சூரியன் சிறுகுழந்தையின் வருடல் போல சுட்டெரிக்காத மென்கதிர்கள் உடலைத் தழுவி சிலிர்க்கவைத்துக் கொண்டிருந்தன. சிங்கைநல்லூர் கந்தசுவாமி கோயிலின் வாசலில் விஜயக்கோன் வீதியன் ஆகியோருடன் புதிதாக ஜெயபாலனும் நின்றுகொண்டிருந்தான். ஏழுகோரளையில் சீதாவாக்கைப் படையிடமிருந்து தப்பிய வீதிய பண்டாரத்தின் சிறுபடை, இரவு தான் ஜெயபாலன் தலைமையில் அங்கு வந்து சேர்ந்திருந்தது. ஜெயபாலன் குழுவினரின் வருகை, வீதியனுக்கு இனந்தெரியாத உற்சாகமொன்றை ஊட்டியிருந்ததை விஜயக்கோன் கண்டான். வீதியன் நிலைமை இவ்வாறிருக்க, அன்று யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் ஆரம்பமாக இருந்த போர்ப்பயிற்சி, அங்கு நின்ற வீரர்களுக்கும் சுற்றியிருந்த மக்களுக்கும் கூட இன்னதென்று தெரியாத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. வீதியோரம் போதையில் விழுந்து கிடந்த ஒருவன் சண்டைபோடுவதாக அபிநயம் பிடித்து தன் தலைமையில் யாழ்ப்பாணாயன் படை வென்றுவிட்டதாய்ச் சொல்லி, தெருநாயைக் கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான்.  எடுத்ததற்கெல்லாம் வாயாலேயே வடை சுடும் தம் நண்பனொருவனைப் பலவந்தமாக இழுத்து வந்து வீரர்களிடம் ஒப்படைத்து, போரிட அழைத்துச்ச...

தந்ததாது (பாகம் 02)

படம்
தூரத்தே கொழும்புத்துறை மேடை தென்பட்டதும் விஜயக்கோன் முதலிக்கு மெல்லிய பதற்றம் ஏற்பட்டிருந்தது. ஆரியச்சக்கரவர்த்தியின் மாலுமியைக் கொன்று பலவந்தமாக அங்கு வருகிறோம் என்பதும், ஆரியச்சக்கரவர்த்தி மாயாதுன்னையின் நண்பன் என்பதும், அவனுக்கு இலேசான கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அருகில் நின்ற வேதியனோ எவ்வித கவலையும் இன்றி கடல்மீது பொற்கம்பம் என விழுந்துகிடந்த சூரிய விம்பத்தின் அழகை இரசித்தபடி வருவது, அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. நேற்று மாலையே அவர்கள் நெடுந்தீவின் மாவெளித் துறைக்கு வந்துவிட்டிருந்தனர். போதிராஜப் பெருமாளை கோழிக்கோடு சாமூத்திரியிடமும், வருஷப்பெருமாளை தஞ்சை நாயக்கனிடமும், படையுதவி கோரி தூது செல்லுமாறு பணித்திருந்தான் வேதியன். அவர்கள் விடைபெற்று, ஊர்காவற்றுறைக்கு சிறுவள்ளமொன்றில் புறப்பட்ட பின், கிளம்பிய கப்பல், இப்போது கொழும்புத்துறையை நெருங்கிவிட்டிருந்தது. துறைமுகப்பக்கமாகத் திரும்பிய விஜயக்கோன் தன்னையே நம்பமுடியாமல் கண்ணை அகலவிரித்துப் பார்த்தான்.  அப்போது அவனையறியாமலே அவன் வாயில் எழுந்த வியப்பொலியைக் கேட்டு அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பினான் வேதியன். துறைமேடையிலி...

தந்ததாது (பாகம் 01)

படம்
போதிராஜப்பெருமாள் குதிரையை மிக மெதுவாகச் செலுத்திக்கொண்டிருந்தார். மூன்று நிழல்களாக, அவர்கள் மூவரும் முன்னே சென்று கொண்டிருப்பது, நிலவொளியில் நன்றாகவே தெரிந்தது. கைக்கெட்டும் தூரத்தில் விஜயக்கோனும் வருஷப்பெருமாளும். அவர்களுக்கும் முன்னே பால்நிலவில் கருநிறப் பாம்பென அசையும் முதுகுத்தசைகளுடன் வேதியன் சென்றுகொண்டிருந்தான். அவர்கள் எல்லோருமே அவரது மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்பது  அவர்கள் அடிக்கடி விடும் பெருமூச்சிலும், தளர்ந்துபோய் குதிரையை நடத்திச் செல்லும் விதத்திலும் தெளிவாகவே தென்பட்டது. வாள்வெட்டுக் காயங்களுக்கு மேலதிகமாக, புத்தளக் காட்டின் சூரைப்பற்றைகள் உடலில் கீறி ஏற்படுத்திய வடுக்களில், வியர்வையும் புழுதியும் பட்டு தாங்கமுடியாத எரிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கடிவாளத்தைப் பிடித்திழுத்து குதிரையை நிறுத்திய போதிராஜர் பின்புறம் செவியைத் திருப்பி கூர்ந்து கேட்டார். மிக அருகில் நீரோடை ஓடும் ஒலி கேட்டது. அப்பால் உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த சில்லூறுகளைத் தாண்டி, பேரமைதியைச் சூடி நிமிர்ந்துநின்றது காடு. தங்களைப் பின்தொடர்ந்து வந்த படை வெகுதூரத்துக்கு முன்பேயே நின்றிருக்...